ஐபோனை கண்டுபிடிக்ககூகுள் அசிஸ்டென்ட்
இனி, 'கூகுள் அசிஸ்டென்ட்' உதவியுடன், உங்கள் 'ஐபோன்' எங்கே இருக்கிறது என்பதை கண்டுகொள்ளலாம். உங்களிடம் இருக்கும் நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கரில், குரோம்காஸ்ட் சாதனத்தில் அல்லது, ஆண்ட்ராய்டு டேப்லெட்டில், உங்களது ஐபோன் எங்கே இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கூறினால், அது உங்கள் போன் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெரிவித்துவிடும்.உங்கள் ஐபோன், சைலன்ட் மோடு அல்லது, 'டு நாட் டிஸ்டர்ப்' மோடில் இருந்தாலும்கூட பிரத்யேகமான சவுண்டு மூலம் கண்டுகொள்ளலாம். இருப்பினும், 'பைண்டு மை' சேவையை போல, 'மேப்' மூலமாக கண்டுகொள்ள முடியாது. இதனால் நமது இருப்பிடத்தில் எங்கே வைத்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள மட்டுமே, கூகுள் அசிஸ்டென்ட் சேவை பயன்படும்.இந்த சேவையை பெற, ஐபோனில், 'கூகுள் ஹோம்' செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.