உள்ளூர் செய்திகள்

கூட்டத்தை காட்டும் கூகுள் மேப்

கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களை தவிர்க்க உதவும் வகையில், 'கூகுள் மேப்' புதிதாக 'ஏரியா பிசினெஸ்' எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் இருக்கும் இடங்களை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.கூகுள் மேப்பின் 'அப்டேட்டட் வெர்ஷ'னில் இந்த வசதியை அனைவரும் பெற முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., ஆகிய இரு இயங்குதளங்களிலும் இந்த சேவையை பெற முடியும். இதன் வாயிலாக உணவகங்கள், கடைகள், பொழுதுபோக்கு இடங்கள், மியூசியம் போன்ற இடங்கள் ஆகியவை குறித்த நிலைமையை அறிய இயலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !