இரட்டை வண்ணத்தில் கூகுள் போன்
'கூகுள்' நிறுவனத்தின் புதிய தயாரிப்பான, 'கூகுள் பிக்ஸல் 6, கூகுள் பிக்ஸல் 6 புரோ' ஆகிய போன்கள், இம்மாதம் 13ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வருகின்றன.ஆனால், இதுவரை கூகுள் நிறுவனம் இது குறித்து எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த போன் குறித்தும் பல யூகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'டுயல் டோன்' என அழைக்கப்படும் இரட்டை வண்ணங்களில் இந்த போன் இருக்கும் என சொல்லப்படுகிறது. பிக்ஸல் 6 இரண்டு கேமரா செட் அப் உடனும், பிக்ஸல் 6 புரோ மூன்று கேமரா செட் அப் உடனும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு வெர்சன் 12ல் இயங்கும் என்கிறார்கள். சந்தைக்கு வந்தால் எல்லாம் தெரிந்துவிடப் போகிறது.