கூகுளின் அந்த காலத்து டிவி
உலகமே,'ஸ்மார்ட் டிவி', 'ஆண்ட்ராய்டு டிவி' என, அடுத்தடுத்த தொழில்நுட்பங்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்கு நேர்மாறாக, கூகுள் நிறுவனம், அதன், 'கூகுள் டிவி'யில், 'பேஸிக் மோடு' எனும் வசதியை இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த,'மோடு'க்கு நம் டிவியை மாற்றிவிட்டால், அந்த காலத்து டிவி போல, நவீன அம்சங்கள் எதுவும் இருக்காது. செயலிகள், குரல் வழி உத்தரவுகள் பிறப்பிப்பது உள்ளிட்ட, 'ஸ்மார்ட்' வசதிகள் எதுவும் இருக்காது. அந்த கால டிவியை போல இயக்கி கொள்ளலாம். துவக்கத்தில், இன்டர்நெட் வசதிகள் இல்லாத இடங்களுக்கு பயன்படும் வகையில் இந்த, 'பேஸிக் மோடு' வசதியை ஏற்படுத்த, கூகுள் திட்டமிட்டது.ஆனால், இன்டர்நெட் வசதிகள் இருந்தாலும், 'ஸ்மார்ட்' தொல்லைகள் எதுவும் இல்லாமல், பழைய மாதிரி டிவியை பார்க்க விரும்புபவர்களும் உள்ளது தெரிய வந்ததும் உற்சாகமாகி விட்டது, கூகுள்.இந்த, 'பேஸிக் மோடி'ல் டிவியை வைத்திருந்தால், நம் டிவி செயல்பாடுகளை, கூகுள் கவனிக்காது என்பது கூடுதல் வசதி!