வருகிறது கேலக்ஸி ஏ 03
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 'சாம்சங்' நிறுவனம் அதன் 'கேலக்ஸி ஏ 02' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அடுத்து அதன் தொடர்ச்சியாக 'கேலக்ஸி ஏ 03' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.இந்த போன் முந்தைய போனை போன்ற அதே அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் இருக்கும் என்றும்; ஒரு சில விஷயங்களில் மட்டும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.குறிப்பாக, கைரேகை சென்சார் பக்கவாட்டில் மாற்றப்பட்டிருக்கும் என்றும், யு.எஸ்.பி.,டைப் சி போர்ட் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் 6.5 அங்குல இன்பினிட்டி வி திரை கொண்டதாகவும் இருக்கும் என்கின்றனர். விலை எவ்வளவாக இருக்கும் என தெரிவிக்கப்படவில்லை.