உள்ளூர் செய்திகள்

ஹோம் மேக்ஸ்

'பழையன கழிதல்' வரிசையில், கூகுள் நிறுவனம், லேட்டஸ்டாக, அதன், 'கூகுள் ஹோம் மேக்ஸ்' ஸ்மார்ட் ஸ்பீக்கர் தயாரிப்பை நிறுத்தி விட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், கறுப்பு, வெள்ளை, என இரு வண்ணங்களில், இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது, கூகுள்.இந்நிலையில், ஹோம் மேக்ஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர் தயாரிப்பை கைவிட்டுவிட்டதாகவும், ஸ்டோரில் இருந்த அனைத்து ஸ்பீக்கர்களும் விற்பனை ஆகிவிட்டதாகவும், கூகுள் தெரிவித்துள்ளது.இருப்பினும், சாப்ட்வேர் அப்டேட், பாதுகாப்பு அப்டேட் ஆகியவற்றை தொடர்வதாகவும், ஏற்கனவே வாங்கியவர்களுக்கு, சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கூகுள் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !