எச்.டி.சி.,யின் வி.ஆர்.ஹெட்செட்
அண்மையில், எச்.டி.சி., நிறுவனம், இரண்டு 'விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்'களை அறிமுகம் செய்துள்ளது. எச்.டி.சி., வைவ் புரோ 2 மற்றும், 'எச்.டி.சி., வைவ் போகஸ் 3' எனும் இந்த இரு ஹெட்செட்டுகளும், 5கே துல்லியம் கொண்டதாகும். இது, இந்த வகையில் இதற்கு முன் அறிமுகம் ஆனவற்றை விட மேம்பட்டதாக உள்ளது.இவற்றில், எச்.டி.சி., வைவ் புரோ 2, 'ஹை ரெஸ்' சான்றிதழுடன் கூடிய, ஹெட்போனுடன் வருகிறது. இந்த சாதனத்தை செயல்படுத்த, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தேவை. இவை எதுவும் தேவைப்படாத, தனியான சாதனமாக வந்துள்ளது, எச்.டி.சி., வைவ் போகஸ் 3.எச்.டி.சி., வைவ் புரோ 2 ஹெட்செட், ஜூன் 4ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஹெட்செட்டின் விலை மட்டும் இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 58 ஆயிரத்து, 700 ரூபாய் ஆகிறது. எச்.டி.சி., வைவ் போகஸ் 3, ஜூன் 27ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 95 ஆயிரத்து, 500 ரூபாய் ஆகிறது.இவை இரண்டும், இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வர உள்ளது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.