புதுமையான மவுஸ்
'லாஜிடெக் வாய்ஸ் எம் 380' எனும், புதிய வயர்லெஸ் மவுசை, லாஜிடெக் நிறுவனம், பைடு நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த மவுசை பயன்படுத்தி, வேகமாகவும், துல்லியமாகவும் 'வாய்ஸ் டைப்' செய்ய முடியும் என்பது இதன் முக்கியமான சிறப்புகளில் ஒன்று. இந்த மவுசில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தி நாம் பேசினால், அதை மவுஸ் உள்வாங்கி டைப் செய்துவிடும். ஒரு நிமிடத்துக்கு, 400 வார்த்தைகளை டைப் செய்துவிடும். 98 சதவீத துல்லியம் கொண்டதாகவும் இந்த டைப்பிங் இருக்கிறது. இப்போதைக்கு ஆங்கிலம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே இந்த மவுசின் துணை கொண்டு, வாய்ஸ் டைப் செய்யலாம்.முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக நாடுகள் அனைத்திலும் அறிமுகமாக உள்ளது. மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'பைடு' நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விலை தோராயமாக, 2,300 ரூபாய் ஆகிறது.