அமேசானின் அறிமுகம்
'அமேசான்' நிறுவனம், அதன் இணையதளம் மற்றும் செயலியில் புதிதாக ஓர் அம்சத்தை சேர்த்துள்ளது. 'பிரத்யேக கட்டுரைகள்' எனும் பகுதி, தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு சென்று, வாடிக்கையாளர்கள் கட்டுரைகளை இலவசமாக படிக்கலாம். இந்த பகுதியில் விளையாட்டு, வாகனங்கள், பொழுதுபோக்கு, அரசியல் உள்ளிட்ட பல கட்டுரைகளை படித்துக் கொள்ளலாம். ஒரு சில கட்டுரைகளை அமேசானே வழங்குகிறது. மற்றவை பிரபல பத்திரிகை நிறுவனங்களிடமிருந்து பெற்று பிரசுரிக்கப்படுகிறது.இப்படி ஒரு வசதி அறிமுகம் செய்திருப்பதை ஏனோ அமேசான் பெரிதாக அறிவிக்கவில்லை. 'கிண்டில்' பயனர்களுக்கு மட்டும் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.மேலும், இப்படி ஒரு பகுதி இருப்பதை கண்டுபிடிப்பதும் சற்று கடினமான காரியமாகவே, அமேசான் வைத்திருக்கிறது. தேடல் பகுதிக்கு சென்று, 'பியூச்சர்டு ஆர்ட்டிகிள்' என டைப் செய்தால், அதன் பிறகே அதை காண இயலுகிறது.