ஐபோன் 13 எதிர்பார்ப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு, 'ஐபோன் 13' ஆக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'ஐபோன் 13' மற்றும் 'ஐபோன் 13 புரோ மேக்ஸ்' ஆகிய போன்களில், 'சாம்சங்' வழங்கும் திரை இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மிகவும் மென்மையாக பயன்படுத்தும் வகையில் இந்த திரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், முந்தைய ஐபோன் மாடல்களை விட பல வகைகளில் மேம்பட்டதாக இருக்கும் என்றும்; குறிப்பாக, திரையை முழுமையாக பயன்படுத்தும் வகையில், மிகச் சிறிய, 'நாட்ச்' இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன், 6.1 அங்குலம் கொண்டதாகவும்; ஐபோன் 13 புரோ மேக்ஸ்', 6.7 அங்குலம் கொண்டதாகவும் இருக்கும் என, கடந்த டிசம்பரில், ஆப்பிள் அறிக்கை ஒன்று வெளியிட்டது நினைவிருக்கக்கூடும்.