உள்ளூர் செய்திகள்

வசந்தத்தில் வரும் ஐபோன்

'ஆப்பிள்' நிறுவனம், அடுத்த ஆண்டின் வசந்த காலத்தில் 'ஐபோன் எஸ்.இ., 2022' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த போன் 'ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்' கொண்டதாகவும், 5ஜி இணைப்புக்கு ஏற்றதாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.இதற்கு முன் வந்த 'ஐபோன் எஸ்.இ., 2020'ல் உள்ள பல அம்சங்கள் அப்படியே தொடரும் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக அதன் 4.7 அங்குல திரை அளவு, ஹோம் பட்டன், டச் ஐ.டி., ஆகியவை அப்படியே தொடரும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !