உள்ளூர் செய்திகள்

துடைக்கும் துணிக்கு இந்த விலையா?

பொதுவாகவே 'ஆப்பிள்' நிறுவனம் ஒரு பொருளை அறிமுகம் செய்தால் அது வித்தியாசமானதாகவும், தரம் மிக்கதாகவும் இருக்கும் என்பது அனைவரது கணிப்பு. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது போன், கம்ப்யூட்டர் மட்டுமின்றி வேறு சில தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து அசத்தும்.தற்போது ஆப்பிள் சாதனங்களின் திரையை துடைப்பதற்காக, 'பாலிஷிங் கிளாத்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த துடைக்கும் துணி, மென்மையான சிராய்ப்புகளை ஏற்படுத்தாத பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றார்போல் விலையும் இருக்கிறது. இதன் விலை 1,900 ரூபாய் ஆகிறது.இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு 224 ரூபாய் என, மாத தவணையிலும் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது தான். ஆப்பிள் சாதனங்களின் டிஸ்பிளேயில் சிராய்ப்புகள் ஏற்பட்டு, அதனால் ஏற்படும் செலவோடு ஒப்பிடும்போது, இந்த துணியின் விலை பெரிதாக இல்லை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !