இது புதுசு: போட்டோகிராபர்களுக்கான போன்
தொழில்முறை புகைப்பட கலைஞர்களுக்காக, ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, சோனி நிறுவனம். 'சோனி எக்ஸ்பீரியா புரோ' எனும் இந்த ஸ்மார்ட்போன், முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த போன், 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்டதாகும். இதில் இருக்கும், மைக்ரோ எச்.டி.எம்.ஐ., போர்ட்டில், நம்முடைய கேமரா அல்லது கேம்கார்டரை இணைத்து கொள்வதன் மூலம், பல வசதிகளை பெறலாம்.ஏற்கனவே சோனி கேமரா அல்லது கேம்கார்டர் வைத்திருப்பவர்களுக்கு, இந்த போன் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறது, சோனி.இந்த போன், 6.5 அங்குலம் மற்றும் 4கே எச்.டி.ஆர்., திரை கொண்டதாகும்.விலை 1.83 லட்சம் ரூபாய்.