இது புதுசு: மைக்ரோசாப்ட் லேப்டாப்
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக, லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ' எனும் இந்த லேப்டாப், கீபோர்டை தனியாக பிரித்துக் கொள்ள முடியாதபடி வந்துள்ளது. இதில், 10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் உள்ளது. அத்துடன், 16 ஜி.பி., ரேம் கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன் வசதியும் உள்ளது. இந்த லேப்டாப்பின் விலை 63, 499 ரூபாயிலிருந்து துவங்கி, அதன் திறன் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப, 1.10 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.ஜே.பி.எல்., இயர்பட்ஸ் பிரபல ஜே.பி.எல்., நிறுவனம் புதிதாக, 'ஜே.பி.எல்., சி.115' எனும், 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் பேட்டரி, சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து, 15 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். இயர்பட்ஸ் மட்டும் தனியாக, 6 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். 15 நிமிடம் சார்ஜ் செய்வதன் மூலம், ஒரு மணி நேரம் வரை எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து, 73 கிராம் எடை கொண்டதாக உள்ளது, இந்த இயர்பட்ஸ். விலை: 4,999 ரூபாய்.எல்.ஜி., மானிட்டர் எல்.ஜி., நிறுவனம், புதிதாக ஒரு மானிட்டரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எல்.ஜி., 32 யு.என். 880 - பி அல்ட்ராபைன் டிஸ்பிளே எர்கோ 4கே' எனும் இந்த மானிட்டர், முழுமையாக சுழற்றிக் கொள்ளும் வசதி கொண்ட, சிறப்புஸ்டாண்டுடன் வந்துள்ளது. இந்த மானிட்டர், 31.5 அங்குல திரை கொண்டதாகும். 178 டிகிரி கோணம் வரை எந்த இடத்திலிருந்தும் தெளிவாகப் பார்க்க முடியும். விலை: 59,999 ரூபாய்