ஜியோ போன் 2021
ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு, புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. நாளை முதல் இந்த திட்டங்கள் அமலுக்கு வருகின்றன.இதன்படி, 1,999 ரூபாய்க்கு, புதிய ஜியோ 'பியூச்சர்' போனை வாங்குபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு வரம்பற்ற சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு வரம்பற்றை அழைப்புகள், மாதம் 2 ஜி.பி., 4 ஜி., டேட்டா சேவைகள் ஆகியவை கிடைக்கும். இதுவே இன்னொரு திட்டமான, 1,499 திட்டத்தில், பியூச்சர் போனுடன், இதே சேவைகள், ஓர் ஆண்டுக்கு கிடைக்கும். ஏற்கனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், 749 ரூபாய் செலுத்தினால், இதே சேவை ஓராண்டுக்கு கிடைக்கும். போன் கிடையாது.