உள்ளூர் செய்திகள்

கரோகி ஆடியோ பிளேயர்

'சரிகமா கார்வான் ஆடியோ பிளேயர்' வரிசையை அடுத்து, இப்போது புதிதாக, 'சரிகமா கார்வான் கரோகி ஆடியோ பிளேயர்' அறிமுகம் ஆகியுள்ளது.'கரோகி' வசதியை பயன்படுத்தி, நாம் பாடிக்கொள்ளலாம். மேலும் பாடலின் வரிகள், இதில் இருக்கும் திரையில் டிஸ்பிளே ஆகும். இதில், 1,000 கரோகி பாடல்கள் உள்ளன.சரிகமா கார்வான் ஆடியோ பிளேயரின் அதே வடிவமைப்புடன், இந்த கரோகி பிளேயரும் வந்துள்ளது. ஆடியோ பிளேயரில் உள்ளது போலவே இதிலும், 5,000 ஹிந்தி பாடல்கள், புளுடூத் வசதி, ரேடியோ, யு.எஸ்.பி., இணைப்பு, ஆக்சிஸ் இன் ஆகியவையும் உள்ளன.பாடல் வரிகளை ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் வருமாறு அமைத்துக் கொள்ளலாம். மேலும், கரோகி பிளேயருடன் சேர்த்து, இரண்டு ஒயர்லெஸ் மைக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே, ரிமோட் ஒன்றும் உள்ளது.விலை: 19,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !