உள்ளூர் செய்திகள்

கூடுதல் வசதி; குறைந்த விலை

'ஆப்பிள் டிவி 4கே - 2022' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம், உலக சந்தையில் இதை அறிமுகம் செய்ததுடன், இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய 'ஸ்ட்ரீமிங்' சாதனம், முந்தைய மாடல்களை விட மேம்பட்டதாக இருப்பதுடன்; விலையும் குறைவாக உள்ளது.முந்தைய மாடலான 'ஆப்பிள் டிவி 4கே' மாடலின் பெரும்பாலான அம்சங்கள், இந்த புதியமாடலிலும் இடம்பெற்றுள்ளன.குறிப்பிடத்தக்க வித்தியாசம், பெரும்பாலான ஐபோன்களில் பயன்படுத்தப்படும் 'ஏ15 பயொனிக் சிப்' இதிலும் இடம்பெற்றிருப்பது தான். இதனால், ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் செயல்பாடு மேம்பட்டதாக இருக்கும்.மேலும், முந்தைய மாடலில் இருப்பது போலவே, 'நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யு டியூப்', உள்ளிட்ட முன்னணி ஓ.டி.டி., சேவைகள் சிறப்பாக இருக்கும். மேலும் 'எச்.டி.ஆர்., 10 டால்பி விஷன், டால்பி அட்மோஸ்' ஆகியவற்றையும் சப்போர்ட் செய்யும்.விலை:64 ஜி.பி., ஸ்டோரேஜ் மற்றும் வைபை இணைப்பு கொண்டது: 14,900 ரூபாய்.128 ஜி.பி., வைபை, ஈத்தர்நெட் இணைப்பு கொண்டது: 16,900 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !