உள்ளூர் செய்திகள்

பயர்பாக்ஸ் லாக்வைஸ் கைவிட்ட மோஸில்லா

'பாஸ்வேர்டு'களை சேமித்து வைத்துக் கொள்ள உதவும், 'பயர்பாக்ஸ் லாக்வைஸ்' செயலி, வரும் டிசம்பர் 13ம் தேதியுடன், தன்னுடைய ஆயுளை முடித்துக் கொள்ள இருக்கிறது. 'மோஸில்லா' நிறுவனம் இதற்கான ஆதரவை விலக்கி கொள்வதை அடுத்து, இந்த செயலி இனி பயன்படாது.பயர்பாக்ஸ் லாக்வைஸ் செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் 13ம் தேதிக்கு பின், இந்த செயலி எந்தவிதமான செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறாது என, மோஸில்லா தெரிவித்துள்ளது.மேலும் இந்த செயலியை, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., போன்களில் இனி பதிவிறக்கம் செய்யவோ, ரீஇன்ஸ்டால் செய்யவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிசம்பர் 13ம் தேதிக்கு பின் வெப் பிரவுசர் வாயிலாக, செயலியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டுகளை அணுகலாம்.இந்த செயலி, காலக்கெடுவுக்கு பின்னும் போனில் இயங்கும் என்றாலும், எந்தவிதமான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஆதரவை பெற இயலாது. இந்த செயலி, முதலில் 'லாக்பாக்ஸ்' எனும் பெயரில், 2018ல் அறிமுகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மிக குறுகிய காலத்தில் இதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !