உள்ளூர் செய்திகள்

புதிய 4கே, 8கே ஸ்மார்ட் டிவிகள்

'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 4கே மற்றும் 8கே மாடல் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 'க்யு.என். 700 ஏ., நியோ க்யு.எல்.இ.டி., 8கே' எனும் ஸ்மார்ட் டிவியையும், 'க்யு.என். 85 ஏ., நியோ க்யு.எல்.இ.டி., 4கே' எனும் ஸ்மார்ட் டிவியையும் அறிமுகம் செய்துள்ளது.இரண்டு டிவிகளும், டால்பி 5.1 ஆடியோ சப்போர்ட் வசதியுடனும், நான்கு எச்.டி.எம்.ஐ., போர்ட் மற்றும் டைஸென் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் வந்துள்ளது. இருப்பினும், சில அம்சங்களில் இவை மாறுபட்டு உள்ளன.இவற்றில், 8கே டிவி, 65 அங்குல அளவில் வந்துள்ளது. இதில், டால்பி 5.1 உடன் கூடிய 70வாட் அவுட்புட் கொண்ட, 4.2.2 சேனல் ஸ்பீக்கர் செட் அப் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக, 4கே டிவி 55, 65, 75 அங்குல அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் 60 வாட் அவுட்புட் உடன் கூடிய, 2.2.2 சேனல் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.விலையை பொறுத்தவரை, 4கே மாடலில், 55 அங்குல டிவி 1.49 லட்சம் ரூபாய் ஆகிறது. 65 அங்குல டிவி 2.15 லட்சம் ரூபாயும், 75 அங்குல டிவி 4.25 லட்சம் ரூபாயும் ஆகிறது. அத்துடன், 65 அங்குல 8கே டிவியின் விலை 3.20 லட்சம் ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !