புதிய டி.ஜே.ஐ., பாக்கெட் 2
நடுக்கம் எதுவுமின்றி, நிலையாக வீடியோ எடுக்க வசதியாக,'டி.ஜே.ஐ., ஓஸ்மோ பாக்கெட்' எனும் கேமரா வந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதிக மேம்பாடுகளுடன் புதிய,'டி.ஜே.ஐ., பாக்கெட் 2' எனும் கேமரா வந்துள்ளது.மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் கூடுதல் மைக்ரோபோன்களுடன் இந்த புதிய,'டி.ஜே.ஐ., பாக்கெட் 2' கேமரா வந்துள்ளது. மூன்று அச்சு,'கிம்பல்' கொண்ட இந்த கேமரா, 117 கிராம் எடை கொண்டதாகும். 140 நிமிடங்கள் பேட்டரி தாக்குப் பிடிக்கும். 4கே கேமரா என்பது கூடுதல் சிறப்பு. வீடியோ மட்டுமின்றி துல்லியமான போடோக்களும் எடுக்கலாம். நீருக்கு அடியில் கூட படமெடுக்கலாம். ஒரு குறும்படத்துக்கு ஒப்பாக இதில் வீடியோ எடுக்கலாம்.இதற்கு முந்தைய மாடலை விட, பலவிதங்களில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது, இந்த கேமரா. இதன் விலை, இந்திய மதிப்பில், 25 ஆயிரத்து, 700 ரூபாய் ஆகிறது. இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை.