புதிய பப்ஜி விளையாட்டு
புதிய பெயரில், 'பப்ஜி கேம்' இந்தியாவுக்கு மீண்டும் வர இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அண்மையில், 'பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' எனும் புதிய கேமை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது, இம்மாதம் 18ம் தேதியன்று வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் இந்நிறுவனம் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. 'பப்ஜி கேம்' தரவுகள் குறித்த பிரச்னைகள் காரணமாக, இந்த விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து, இப்போது வேறு பெயரில் வருகிறது.இந்த புதிய விளையாட்டுக்கான முன்பதிவு 18ம் தேதியன்று, 'கூகுள் பிளே ஸ்டோரில்' துவங்கும் என சொல்லப்படுகிறது. இந்த விளையாட்டு 3 அடுக்கு கொண்டதாக இருக்கும் என்றும் தெரிகிறது.இந்த கேமை விளையாட, ஆண்ட்ராய்டு 5.1.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு மற்றும் 2 ஜி.பி., ரேம் இருந்தாலே போதுமானது என்கின்றனர்.