உள்ளூர் செய்திகள்

புதிய ஸ்மார்ட் வாட்சுகள்

நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் 2கடந்த வாரம் இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆனது. 1.8 அங்குலத்தில், டி.எப்.டி., எல்.சி.டி., டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், ஏழு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 50 'ஸ்போர்ட்ஸ் மோடு'களை சப்போர்ட் செய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த வாட்சின் முகப்பை, 100 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.அறிமுக விலை: 1,999 ரூபாய்கிராஸ்பீட்ஸ் இக்னைட் ஸ்பெக்ட்ரா சீரிஸ்'கிராஸ்பீட்ஸ்' நிறுவனம், அதன் 'இக்னைட் ஸ்பெக்ட்ரா சீரிஸ்' ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. 'இக்னைட் ஸ்பெக்ட்ரா' மற்றும் 'இக்னைட் ஸ்பெக்ட்ரா பிளஸ்' என இரண்டு வாட்சுகள் அறிமுகம் ஆகியுள்ளன. 'ரெட்டினா அமோல்டு டிஸ்ப்ளே' உடன் வந்துள்ள இதன் முகப்பை, 200 விதங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 30 வகையான ஸ்போர்ட்டுகளை இந்த வாட்ச் சப்போர்ட் செய்யும்.மேலும், இதில் 150 பாடல்களுக்கும் மேல் சேமித்துக் கொள்ள 'இன்பில்ட் ஸ்டோரேஜ்' வசதியும் உள்ளது. பேட்டரி 10 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.அறிமுக விலை:இக்னைட் ஸ்பெக்ட்ரா: 4,999 ரூபாய்இக்னைட் ஸ்பெக்ட்ரா பிளஸ்: 5,999 ரூபாய்.சிஸ்கா எஸ்.டபுள்யு 300 போலார்'சிஸ்கா' நிறுவனத்தின் தயாரிப்பு இது. 1.32 அங்குல 'அல்ட்ராவியூ ஐ.பி.எஸ்., டிஸ்ப்ளே' கொண்டது, இந்த ஸ்மார்ட் வாட்ச். இந்த வாட்சில் 37 'ஸ்போர்ட்ஸ் மோடு'கள் உள்ளன. கிட்டத்தட்ட 100 பாடல்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி; 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' வாயிலாக நேரடியாக வாட்சுடன் இணைப்பை ஏற்படுத்தி, பாடல்களை கேட்கலாம். இதில், இரட்டை புளுடூத் இணைப்பு வசதி இருப்பது கூடுதல் சிறப்பு.விலை: 3,299 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !