பட்டையை கிளப்ப வரும் நிஞ்சா புரோ பிளஸ்
உள்நாட்டை சேர்ந்த 'பயர் - போல்ட்' நிறுவனம், அதன் 'நிஞ்சா' ஸ்மார்ட்வாட்ச் வரிசையில், 'நிஞ்சா புரோ பிளஸ்' எனும் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. விற்பனைக்கான நாள் மற்றும் விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தோராயமாக 7,999 ரூபாயாக இருக்கலாம். பயர் - போல்ட் நிறுவனம், வாட்ச் குறித்த பல அம்சங்களை தெரிவித்துள்ளது. இதன் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 5 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.அத்துடன், 30 ஸ்போர்ட் மோடுகள் மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள் ஆகியவை இடம்பெற்றிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதில் 1.69 அங்குல எச்.டி., டிஸ்ப்ளே, சமூக ஊடகங்களுக்கான நோட்டிபிகேஷன்கள், வீடியோ கேம்கள், 200 வகையான டயல் முகப்புகள் என பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிறுவனம், இதற்கு முன் நிஞ்சா வரிசையில், 'நிஞ்சா, நிஞ்சா 2, நிஞ்சா புரோ மேக்ஸ், நிஞ்சா 2 மேக்ஸ், நிஞ்சா கால் 2' என பல ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.