உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய போன்

நோக்கியா தயாரிப்புக்கான உரிமம் பெற்ற எச்.எம்.டி., நிறுவனம் இந்தியாவில், அதன் 'சி' வரிசை போன்களில் அடுத்ததாக, 'சி 21 பிளஸ்' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.இந்த போன் இரண்டுவிதமான சேமிப்பக வசதிகளுடன் வந்துள்ளது. 3 ஜி.பி.,+ 32 ஜி.பி., மற்றும் 4 ஜி.பி., + 64 ஜி.பி., என இருவிதங்களில் வந்துள்ளது. இந்த போன் 6.5 அங்குல எச்.டி., டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளது. இரட்டை கேமரா செட் அப் உள்ளது.மேலும் 5,050 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்ட இந்த போனை, ஒரு முறை சார்ஜ் செய்தால் தாராளமாக மூன்று நாட்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'பிங்கர் பிரிண்டு சென்சார்' மற்றும் எப்.எம்., ரேடியோ வசதியும் இதில் உள்ளது.விலை3 ஜி.பி.,+ 32 ஜி.பி.,: 10,299 ரூபாய்4 ஜி.பி.,+ 64 ஜி.பி.,: 11,299 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !