பக்கா பார்ட்டி ஸ்பீக்கர்கள்
ஜே.பி.எல்., நிறுவனம், இந்தியாவில், புதிய 'பார்ட்டி ஸ்பீக்கர்'களை அறிமுகம் செய்துள்ளது. 'ஜே.பி.எல்., பார்ட்டிபாக்ஸ் 710, பார்ட்டிபாக்ஸ் 110, பார்ட்டிபாக்ஸ் என்கோர் எசென்ஷியல்' என, மூன்று ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்பீக்கர்கள், தண்ணீர் புகாமலிருக்க, 'ஐ.பி.எக்ஸ். 4' தரத்திலான வடிவமைப்பை கொண்டுள்ளன. இந்த மூன்று மாடல்களும், புளூடூத் இணைப்பு வசதி கொண்டவை. இவற்றை ஜே.பி.எல்., பார்ட்டிபாக்ஸ் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.இரண்டு பார்ட்டிபாக்ஸ் ஸ்பீக்கர்களை இணைத்து, 'ஸ்டீரியோ அவுட்புட்'டும் பெறலாம். மேலும் இந்த ஸ்பீக்கர்களில் கிடார், மைக் ஆகியவற்றை இணைக்கவும் வசதிகள் உள்ளன. பார்ட்டிபாக்ஸ் 710 ஸ்பீக்கர், 800 வாட் அவுட்புட் கொண்டதாகும். இரண்டு டுவீட்டர்கள், எட்டு வூபர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் எடை 27.8 கிலோகிராம்.பார்ட்டிபாக்ஸ் 110 ஸ்பீக்கர் 160 வாட் அவுட்புட் கொண்டதாகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால், 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இதன் எடை 10.84 கிலோ கிராம். பார்ட்டிபாக்ஸ் என்கோர் எசென்ஷியல் ஸ்பீக்கர், 100 வாட் அவுட்புட் திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பீக்கர்களை கொண்டு, ஸ்டீரியோ வசதியையும் இதில் பெறலாம். இதன் எடை 5.9 கிலோ கிராம்.விலை: பார்ட்டிபாக்ஸ் 710 : 64,999 ரூபாய்பார்ட்டிபாக்ஸ் 110 : 31,999 ரூபாய்பார்ட்டிபாக்ஸ் எசென்ஷியல்: 24,599 ரூபாய்