உள்ளூர் செய்திகள்

பார்ட் பார்ட்டாக லேப் டாப்

சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த, 'பிரேம்வொர்க்' நிறுவனம், புதியதொரு லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் இருக்கும் வசதிகள், மற்ற எல்லா லேப்டாப்களிலும் இருக்கும் என்றாலும், வேறொரு முக்கியமான அம்சம் இதில் இடம்பெற்றுள்ளது.இந்த லேப்டாப்பை நமக்கு ஏற்ற வகையில், அமைத்துக்கொள்ளலாம்; மேம்படுத்தலாம்; பழுது நீக்கலாம். இந்த லேப்டாப்பில் என்னென்ன, 'போர்ட்டுகள்' தேவை என்பதை, நாமே தேர்வு செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல; அது எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து கொள்ளலாம். இடதுகைப் பழக்கம் இருப்பவர்களுக்கு இது கூடுதல் வசதி.பேட்டரி, திரை, கீபோர்டு என அனைத்தையும் மொத்தமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இந்த லேப்டாப்பை, 'அசெம்பிள்' செய்யாமல் வாங்கி, நாமே பாகங்களை பொருத்திக் கொள்ள விரும்பினால், அப்படியும் வாங்கிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.மொத்தத்தில், பாகங்களை மூட்டையாக கட்டி வாங்கி வந்து, நமக்கு ஏற்றபடி, லேப்டாப்பை உருவாக்கி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !