உள்ளூர் செய்திகள்

பப்ஜியின் புதுவிளையாட்டு 18ம் தேதி முதல் முன்பதிவு

தடை செய்யப்பட்ட, மொபைல் கேம் ஆன, 'பப்ஜி' மீண்டும் இந்தியாவில் கால் ஊன்றுகிறது. இம்முறை, 'பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' என்ற பெயரில் வருகிறது. சீன நிறுவனங்களின் முதலீடுகள் இல்லாமல், இந்தியாவுக்கு என, பிரத்தேயகமாக தயாரிக்கப்படிருக்கும் விளையாட்டு இந்த, 'பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' என்கிறது, 'பப்ஜி' நிறுவனம்.இந்தியாவில் இந்த விளையாட்டை, கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும்; முன்பதிவு, 18ம் தேதியன்று துவங்க இருப்பதாகவும், 'பப்ஜி' தெரிவித்துள்ளது.இந்த விளையாட்டை, கொரியாவில் இருக்கும் கேம் டெவலப்பரான, 'கிராப்டான்' தயாரித்துள்ளது. இந்திய தரவுகள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று, 'பப்ஜி' தெரிவித்துள்ளது ஆறுதலான ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !