சாம்சங்: புதிய 5ஜி போன்
'சாம்சங்' நிறுவனத்தின் புதிய 'கேலக்ஸி எம்' வகை ஸ்மார்ட் போன்கள், இந்தியாவில் நாளை அறிமுகம் ஆகிறது. இந்த ஸ்மார்ட் போன், அனேகமாக 'சாம்சங் கேலக்ஸி எம் 13 - 5ஜி' ஸ்மார்ட் போனாக இருக்கக்கூடும் என்கின்றனர்.இந்த போன், மூன்று வண்ண தேர்வுகளில், இரண்டு விதமான சேமிப்பக வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5 ஆயிரம் மில்லி ஆம்ஸ் ஹவர் பேட்டரி திறனுடன், 15 வாட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.அத்துடன், 6.5 அங்குல முழு எச்.டி., எல்.இ.டி., டிஸ்ப்ளே கொண்ட இந்த போன், 4.ஜி.பி., + 64 ஜி.பி., மற்றும் 4.ஜி.பி., + 128 ஜி.பி., என இரு சேமிப்பக வசதியுடன் வருகிறது.இந்த போனின் சேமிப்பு அளவை, மைக்ரோ எஸ்.டி., கார்டு வாயிலாக, ஒரு டி.பி., வரை நீட்டித்துக் கொள்ளமுடியும்.இதன் முதன்மை கேமரா, 50 மெகா பிக்ஸல் கொண்டதாகும். விலை, நாளை அறிமுகத்துடன் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.