சாம்சங் புதிய லேப்டாப்கள்
சாம்சங் நிறுவனம், தன்னுடைய அறிமுக நிகழ்வில், கேலக்ஸி புக் புரோ 360 மற்றும் கேலக்ஸி புக் புரோ லேப்டாப் வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது கூடவே, சாம்சங் கேலக்ஸி புக் மற்றும் கேலக்ஸி புக் ஒடிஸி ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் லேப்டாப்புக்கு உலக அளவில் வரவேற்பு இருக்கும் நிலையில், இத்தகைய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனை வருகிறது. இந்தியாவில் இவை எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.