உள்ளூர் செய்திகள்

சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர்கள்

ஸ்மார்ட் தொழில்நுட்பம் வந்தபிறகு, டிவி மட்டுமின்றி; கம்ப்யூட்டர் மானிட்டரும் பெரிய அளவுகளில் வரத்துவங்கி விட்டன. அந்த வகையில், சாம்சங் நிறுவனம், அதன் ஸ்மார்ட் மானிட்டர் வரிசையில், புதிதாக இரண்டு அளவுகளில், மானிட்டர்களை அண்மையில், அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.'ஸ்மார்ட் மானிட்டர் எம்.7' வரிசையில், 43 அங்குல 4கே மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், 'எம் 5' வரிசையில், 24 அங்குல திரை கொண்ட மானிட்டரையும் அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில், 'எம் 5' வரிசையில், 27 அங்குல மானிட்டரையும்; 'எம் 7' வரிசையில், 32 அங்குல மானிட்டரையும் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த இரு மானிட்டர்களின் விலையும், இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 15 ஆயிரம் ரூபாய் விலையில் துவங்குகிறது. இந்த மானிட்டர்கள், 'டிவி பிளஸ்' வசதியும் கொண்டவை. அதனால், 'நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்' போன்றவற்றையும் கண்டுகளிக்கலாம். மேலும், இந்த ஸ்மார்ட் மானிட்டர்களுக்காக, சூரிய சக்தியிலும் இயங்கும் ரிமோட்டும் கொடுக்கப்படுகிறது என்பது கூடுதல் வசதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !