உள்ளூர் செய்திகள்

சாம்சங்கின் புதிய பிரேம் டிவி

'சாம்சங்' நிறுவனம், அதன் புதிய 'தி பிரேம் டிவி 2022' வரிசையை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை அல்ட்ரா பிரீமியம் மாடல் டிவிகளாகும்.இந்த மாடல் டிவிகளுடன் 'சாம்சங் கேலக்ஸி ஏ 32' ஸ்மார்ட் போனும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த டிவியின் முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம், டிவியை அணைத்துவிட்டால், அது ஓவிய சட்டமாக தோற்றமளிக்கும்.இந்த டிவி, கியூ.எல்.இ.டி., டிஸ்ப்ளே உடன், 'குவாண்டம் டாட்' தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது.இதில், 'ட்ரூ டால்பி அட்மோஸ்' வசதியுடன், மல்டி சேனல் ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளன.மொத்தம் 5 அளவுகளில் வந்துள்ளது. 43 அங்குலத்தில் துவங்கி, 50, 55, 65, என 75 அங்குலம் வரை அறிமுகம் ஆகியுள்ளது. துவக்க விலை: 61,999 ரூபாய்அதிகபட்ச விலை: 2,99,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !