சாம்சங்கின் புதிய போன்கள்
'சாம்சங்' நிறுவனத்தின், 'கேலக்ஸி இசட் பிளிப் 3' மற்றும், 'கேலக்ஸி இசட் போல்டு 3' ஆகிய இரண்டு போன்களும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அனேகமாக, ஆகஸ்ட் மாதத்தில் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, இந்த போன்களை, நாள் ஒன்றுக்கு, 70 ஆயிரம் வீதம் தயாரிக்கும்படி, சாம்சங் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு போன்களையும், முதற்கட்டமாக 70 லட்சம் என்ற அளவுக்கு தயாரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த இரண்டு போன்களும், அனேகமாக ஆகஸ்ட் 27ம் தேதியன்று, 'கேலக்ஸி வாட்ச் சீரிஸ் 4' உடன் சேர்த்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சாம்சங் இசட் பிளிப் 3' விலை, 74 ஆயிரத்திலிருந்து, 89 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.