இரண்டாம் தலைமுறை கூகுள் நெஸ்ட் ஹப்
இரண்டாம் தலைமுறை, 'கூகுள் நெஸ்ட் ஹப்' ஸ்மார்ட் டிஸ்பிளே சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த சாதனத்தில் துாக்கத்தை கவனிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கேமரா கிடையாது என்றாலும், குறட்டை, இருமல் போன்ற ஒலிகளின் மூலம், நம் தூக்கத்தை இது கண்காணித்து அறிவிக்கும்.ஆனால், இந்த வசதி தேவையா, இல்லையா என்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம். விருப்ப தேர்வாகவே இந்த தொழில்நுட்பம் உள்ளது.முதல் தலைமுறை சாதனத்தை விட, இந்த இரண்டாம் தலைமுறை சாதனத்தில் ஆடியோ தரம், 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்போதைக்கு ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும். இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது இன்னும் அறிவிக்கப் படவில்லை.விலை: 7,250 ரூபாய்