உள்ளூர் செய்திகள்

சென்ஹைசர் இயர்பட்ஸ் ஆண்டுவிழா பதிப்பு

சென்ஹைசர் நிறுவனம் அதன் புதிய, 'சென்ஹைசர் மொமென்டம் ட்ரூ ஒயர்லெஸ் 2' இயர்பட்சின் ஆண்டுவிழா பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய, 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்த இயர்பட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.முழுக்க கறுப்பு வண்ணத்தில், சென்ஹைசர் ஒரிஜினல் முத்திரையுடன் வந்துள்ளது, இந்த புதிய இயர்பட்ஸ். சார்ஜிங் கேஸிலும் இந்த முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மாடல் இயர்பட்சுகள், மெட்டாலிக் கறுப்பு வண்ணத்துடன், புதிய சென்ஹைசர் லோகோவுடன் இருக்கும்.7 மி.மீ., ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், 28 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வகையிலான பேட்டரி திறன் போன்றவற்றுடன் வந்துள்ளது, இந்த ஆண்டுவிழா இயர்பட்ஸ்.விலை: 24,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !