சோனியின் புதிய ஹெட்போன்
'சோனி' நிறுவனம், இந்தியாவில் புதிய ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சோனி டபுள்யு., 'எச்.எக்ஸ்.பி.,910' என்., எனும் இந்த ஹெட்போன், ஒயர்லெஸ் மாடல் ஆகும்.இந்த ஹெட்போன், 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' மற்றும் 'எக்ஸ்ட்ரா பேஸ்' வசதியுடன் வந்துள்ளது. மேலும், இதில் 'டுயல் நாய்ஸ் சென்சார்' தொழில்நுட்பம் இடம்பெற்றிருப்பதால், வெளிப்புற சத்தம் எதுவும் கேட்காமல், இசையை ரசிக்கலாம். இதன் பேட்டரி ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 30 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும்.விலை: 14,999 ரூபாய்.