சவுண்டுகோர் லைப் டாட் 2
'சவுண்டுகோர் லைப் டாட் 2 ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸை', ஆங்கர் நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸை, சார்ஜிங் கேஸிலிருந்து எடுத்ததும், கடைசியாக எந்த போனுடன் இணைக்கப்பட்டிருந்ததோ அந்த போனுடன், அதுவாகவே உடனடியாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை.இதனுடைய பேட்டரி, 8 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வகையில் உள்ளது. 8 மி.மீ டிரைவர்களுடன், நீர் புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. புளூடூத், 5.0 வசதி கொண்டது. மேலும், இதில், 'அல்ட்ரா சாப்ட் சிலிகோன்' இருப்பதால், அளவு வித்தியாசம் இல்லாமல், அனைவரின் காதுகளிலும் கணகச்சிதமாக பொருந்தும். சார்ஜிங் கேஸ், விரைவான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன், யு.எஸ்.பி., டைப் சி போர்ட்டுடன் வந்துள்ளது.இதன் விலை: 3,499 ரூபாய்.