உள்ளூர் செய்திகள்

டெக்னோ ஸ்பார்க் 6 கோ

அண்மையில், 10 ஆயிரம் ரூபாய்க்குள் அறிமுகம் ஆகியிருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று,'டெக்னோ ஸ்பார்க் 6 கோ'. பிரபல, 'டெக்னோ' நிறுவனத்தின் இந்த போன், 6.52 அங்குல திரையுடன் வந்துள்ளது.'மீடியாடெக் ஹீலியோ ஏ 25' பிராசஸர் கொண்ட இந்த போன், 5 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்டதாகும். இதன் முன்பக்கத்தில், 8 எம்.பி., கேமராவும்; பின்பக்கத்தில், 13 எம்.பி., ஏ.ஐ., லென்ஸ் கொண்ட கேமராவும் உள்ளன.இத்துடன், 4 ஜி.பி., ரேம், 64 ஜி.பி., சேமிப்பகம் ஆகியவையும் கொண்டுள்ளது. 'ஆண்ட்ராய்டு 10' இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், எச்.டி., திரை கொண்டது. பிங்கர்பிரின்ட் சென்சாரும் இதில் உள்ளது, கூடுதல் வசதி.விலை: 8,699 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !