இனி உடம்பே பேட்டரி
நம் உடல் சூட்டை வைத்து, மின்சாரம் தயாரித்துக்கொள்ளும் வகையிலான சாதனங்கள், விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறிய, 'தெர்மோ எலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள்' மூலம், நம் உடல் சூட்டினை, மின்சாரமாக மாற்றிவிடும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இதையடுத்து, எதிர்காலத்தில், 'வியரபிள்' எனும், உடலில் அணியும் வகையிலான சாதனங்கள், பேட்டரி இல்லாமல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.போகிற போக்கில், நம்மையே பேட்டரியாகவும் மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது. அதிலும், காய்ச்சல்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்டால் எல்லோரும் சார்ஜ் ஏற்றிக்கொள்வார்கள்!