பிரிட்டிஷ்காரரின் கைவண்ணம்
'ஆப்பிள்' நிறுவனம் 'பீட்ஸ் ஸ்டூடியோ 3' ஒயர்லெஸ் ஹெட்போனில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்போன் பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் சாமுவேல் ரோஸ் என்பவரின், 'எ கோல்டு வால்' எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பீட்ஸ் ஹெட்போன் லிமிடெட் எடிஷன், புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது என்பதை தவிர, மற்றபடி இதற்கு முந்தைய ஸ்டூடியோ 3 ஹெட்போனின் அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது.இந்த ஹெட்போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் ஆகும்.விலை: தோராயமாக 25,900 ரூபாய்.