சென்ஹைசரின் புதிய இயர்போன்
சென்ஹைசர் நிறுவனம் புதிதாக,'சி.எக்ஸ். 400 பி.டி.,' எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களில் இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என, சென்ஹைசர் தெரிவித்துள்ளது.சார்ஜிங் கேசுடன் இந்த இயர்போன், 20 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும்.ஒவ்வொரு இயர்பட்சும், 7மி.மீ., அளவிலான டிரைவருடன் வந்துள்ளது. போன் அழைப்புகளை ஏற்க, இசையை கட்டுப்படுத்த, குரல் வழி உத்தரவுகள் பிறப்பிக்க ஏதுவாக, 'டச் பேடு' வசதி உள்ளது.இருப்பினும், ஒரே சமயத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களுடன் இதை இணைக்க இயலாது என்பது சிறு ஏமாற்றமே.எதிர்பார்க்கப்படும் விலை: 17, 500 ரூபாய்.