உள்ளூர் செய்திகள்

ஐபோன் போன் விலை 28 லட்சம் ரூபாய்

'ஆப்பிள்' நிறுவனம், முதன் முதலாக தயாரித்து அறிமுகம் செய்த, 'ஐபோன்' ஒன்று, ஏலத்தில் நல்ல விலைக்கு போய் உள்ளது. அண்மையில், பிரிக்கப்படாத முதல் தலைமுறை ஐபோன் ஒன்று, அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. இந்த போனை வாங்க பலர் போட்டி போட்டனர். இறுதியில் இந்த போன், 35 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 28 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.இதனுடன் சேர்த்து, ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை 'ஐபாடு', கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில், முதல் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபாடு, 2001ல் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த முதல் தலைமுறை ஐபோன் தான், இப்போதைய ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !