வீடியோ - ஆடியோவுக்கு இடையே எந்த தாமதமும் இருக்காது
'பிடிரான்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பிடிரான் பாஸ்பட்ஸ் டாங்கோ ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' எனும் பெயரில் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் ஆகியுள்ளது.இந்த இயர்பட்சில், இ.என்.சி., எனும் சுற்றுப்புற சப்தங்களை நீக்கும் தொழில்நுட்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போன் அழைப்புகளின் போது பேசுபவர்களின் குரல் தெளிவாக கேட்கும்.அதுமட்டுமின்றி, இந்த இயர்பட்ஸ், வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களை பார்க்க மிகச் சிறப்பானதாக இருக்கும். காரணம், வீடியோவுக்கும் ஆடியோவுக்கும் இடையே எந்த தாமதமும் இருக்காது என்பது தான். கறுப்பு, வெள்ளை என இரு வண்ணங்களில் வந்துள்ளன.விலை: 1,299 ரூபாய்.