டைமெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்
'டைமெக்ஸ்' நிறுவனம் இந்திய சந்தையில்,'டைமெக்ஸ் ஹெலிக்ஸ் ஸ்மார்ட் 2.0' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.இந்த வாட்சில், உடல் வெப்பநிலையை காட்டும் சென்சார் இதயத் துடிப்பை அளவிடும் சென்சார், மற்றும் வழக்கமான இதர வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் 10 ஸ்போர்ட்ஸ் மோடுகளும் உள்ளன. சதுர வடிவமான இந்த வாட்ச், 5 வண்ணங்களில் வந்துள்ளது. அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில், இதன் பேட்டரி, 9 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும். இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.5 அங்குல திரை கொண்டது. வாட்சின் முகப்பை, 24 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம். இதில், 4 வாட்சுடனேயே வருகிறது. மீதி 20 முகப்பு வடிவங்களை, செயலி மூலமாக பெறலாம்.மின்னஞ்சல் குறித்த நோட்டிபிகேஷனையும் இதில் பெறலாம் என்பது கூடுதல் வசதி.விலை: 3,999 ரூபாய்.