உள்ளூர் செய்திகள்

இரண்டு கண்கள்; நான்கு காட்சிகள்

சாம்சங் நிறுவனம், அதன், 'மைக்ரோ எல்.இ.டி.,' டிவி வரிசையில், புதிய, 'மாடுலர்' டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 110, 99, 88 அங்குல அளவுகளில், இந்த மாடுலர் டிவி வந்துள்ளது. பெரிய அளவிலான டிவி என்றாலும், இதை தொழில் வல்லுனர்கள் துணை இன்றி, நாமே சுவரில் மாட்டிக் கொள்ளலாம் என்கிறது, சாம்சங்.இந்த டிவியின் மற்றொரு சிறப்பு, ஒரே திரை; நான்கு நிகழ்ச்சி கள் என்பது தான். இந்த டிவியின் திரையை, விரும்பினால், நான்காக பிரித்து, நான்கு நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் காணலாம். நான்கு திரைகளின் ஒலி அளவுகளையும் தனித்தனியாக மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும். செய்தி சேனல்களை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ஒரே சமயத்தில் ,நான்கு சேனல் செய்திகளை ஒருங்கே காண்பது என்பது சவுகரியமான ஒன்று தான்.அல்லது வீட்டு பாதுகாப்புக்காக, கதவருகில் பொருத்தியிருக்கும் கேமரா காட்சிகளை, ஒரு திரையில் ஓடவிட்டுவிட்டு, மற்றவற்றில் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொள்ளலாம். நான்காக மட்டுமல்ல; இரண்டு அல்லது, மூன்று திரைகளாகவும் இந்த டிவி திரையை, நாம் விரும்பும்படி பிரித்து காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !