வரப் போகுது: நோக்கியா 1.4
கடந்த ஆண்டு அறிமுகமான, 'நோக்கியா 1.3' போனை அடுத்து, விரைவில், 'நோக்கியா 1.4' வர உள்ளது. இரட்டை கேமரா செட் அப் உடன் வரவுள்ள இந்த போன், 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் வருகிறது. மேலும், 6.51 அங்குலத்திரையுடனும், 16 ஜி.பி. சேமிப்பகத்துடனும் வர உள்ளது. 128 ஜி.பி., வரை சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த போனின் விலை கிட்டத்தட்ட, 8,800 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.