வரப் போகுது: சாம்சங் கேலக்ஸி ஏ 52 சாம்சங்
நிறுவனத்தின், 'கேலக்ஸி ஏ 52' ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகிறது. இந்த போன், இந்தியாவில், நொய்டாவில் தயாரிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த போன் குறித்த சில தகவல்களும் கசிந்துள்ளன. 6.5 அங்குலம் திரை கொண்ட இந்த போன், 'குவால்காம் ஸ்நாப்டிராகன் 750 ஜி எஸ்.ஓ.சி.,' தளத்தில் இயங்கும். 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இது ஒரு, 4ஜி மாடல் போனாகும்.இந்த போன், 5ஜி மாடலிலும் அறிமுகம் செய்யப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.