போனை மின்னல் தாக்குமா? ஷாவ்மி நிறுவனம் விளக்கம்!
ஸ்மார்ட்போனில் கீறலா? டூத் பேஸ்ட்டை வைத்து சரிசெய்துவிடலாம்!இப்படி ஒரு செய்தியை யாராவது கொளுத்திப் போட்டுவிடுவர். பின் அது சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாகப் பரவிவிடும்.இதேமாதிரி சில நாட்களுக்கு முன், இடி - மின்னல் இருக்கும்போது, ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால், மின்னல் போனில் பாய்ந்துவிடலாம் என்று ஒரு செய்தி பரவியது.ஆனால் அதுவும் உண்மையல்ல என 'ஸ்மார்ட்போன்' தயாரிப்பு நிறுவனமான 'ஷாவ்மி' பல சோதனைகளை நடத்திக் காட்டி, நிரூபித்துள்ளது.டிஸ்ப்ளே விரிசல்களை, பற்பசையைக் கொண்டு சரி செய்யலாம் என்பது தவறான தகவல் என்பதையும், 'ஷாவ்மி' நிறுவனம் தான் இதற்கு முன் தெளிவுபடுத்தியது. இப்போது மின்னல் தாக்காது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. அத்துடன் அந்த சோதனையை 'யு டியூப்'பிலும் பகிர்ந்துள்ளது.இடி - மின்னல் இருக்கும்போது போனை பயன்படுத்தினால் மின்னல் தாக்கிவிடும் என்பது தவறான கருத்து என்றும், மிக மிக அரிதாக, லேண்டுலைன் போனில் பேசும்போது, மின்னல் தாக்க சிறு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.