உள்ளூர் செய்திகள்

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைக்காக யு டியூப்ஆன்லைன் ஸ்டோர்

'யு டியூப்' நிறுவனம், 'வீடியோ ஸ்ட்ரீமிங்' சேவைகளுக்காக, ஓர் 'ஆன்லைன்' ஸ்டோரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்காக, இந்நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.இந்த புதிய தளத்தை அமைப்பதற்கான முயற்சியில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யு டியூப் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த சேவை அறிமுகம் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.தற்போது அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் 'டிஷ் டிவி, கேபிள் டிவி, சாட்டிலைட் டிவி' போன்ற இணைப்புகளை தவிர்த்துவிட்டு, வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை மட்டும் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.இந்நிலையில், யு டியூப் நிறுவனமும், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையில் இறங்குவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !