உள்ளூர் செய்திகள்

ஸூம் இரண்டாவது அலை

இந்த ஆண்டு துவக்கத்தில், யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள், இப்படி ஒரு செயலி அறிமுகம் ஆகும்; அதன் துணையுடன் தான், இனி நாம் அலுவல பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்று.கொரோனா பாதிப்பு உருவான சமயத்தில், 'ஸூம்' செயலியை, லட்சக் கணக்கானோர் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதனால், 2020ம் ஆண்டு என்றாலே, கொரோனா, ஸூம் என இரண்டு மறக்க முடியாத விஷயங்கள் தான் நினைவுக்கு வரும் என்றாகிவிட்டது. காணொலி கூட்டங்கள் விஷயத்தில், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களை மிக எளிதாக பின்னுக்குத் தள்ளி, முன்னேறிய நிலையில், அடுத்தகட்டமாக, ஸூம் நிறுவனம், இ - மெயிலை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.அத்துடன், காலண்டர் செயலியையும் அறிமுகம் செய்யும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !