உள்ளூர் செய்திகள்

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறை

அர்மீனியா வேலை அனுமதி பெறும் நடைமுறைமுதலில், ஒரு அர்மீனிய நிறுவனத்தில் வேலை பெறுவது அல்லது வேலை வாய்ப்பு அழைப்பு(Permission/Invitation Letter) வாங்க வேண்டும். வேலை வாய்ப்பு உறுதி செய்ததும், அந்த நிறுவனமே உங்களுக்கு 'Work Permit' அப்ளை செய்வதற்குப் பொறுப்பாக இருக்கும். தேவையான ஆவணங்கள்: செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (passport) - குறைந்தது 6 மாதங்கள் வரை செல்லுபடியானது. அர்மீனிய நிறுவனத்திலிருந்து வேலை அழைப்பு கடிதம் (Invitation/Offer letter). வேலை ஒப்பந்தம் (Employment contract). தேர்ச்சி சான்றிதழ்கள் - வேலைக்கு தொடர்பான கல்வி சான்றிதழ்கள்/ அறிவிப்புகள். சமீபத்திய புகைப்படங்கள் (2). நிதி ஆதரவு - உங்கள் வாழ்வாதாரம் போதுமான வங்கி நிலுவைகள். அரசு கட்டணம் செலுத்திய ரசீது(Work Permit fee: சுமார் AMD 25,000 - 52 USD). வேலை அனுமதி விண்ணப்பப் படிவம். பணியளிபவர் (Employer) workpermit.am இணையதளத்தில் நிறுவனத்தைக் பதிவு செய்ய வேண்டும். பணி விவரங்களை பதிவிட்டு, அனைத்து ஆவணங்களையும் செயல்முறைக்கு சமர்பிக்க வேண்டும். Ministry of Labour and Social Affairs-க்கு விண்ணப்பத்தை அனுப்பி, 13 முதல் 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். Work Permit 1 வருடத்துக்கு வழங்கப்படுகிறது; மீண்டும் புதுப்பிப்பு சாத்தியம். Work Permit கிடைத்த பின்னர், இரண்டாவது கட்டமாக பொது குடியிருப்பு (Temporary Residence Permit) விண்ணப்பிக்க வேண்டும். குடியிருப்பு அனுமதி பெற்றவுடன், நீங்கள் சட்டப்படி அர்மீனியாவில் வேலை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !